T20 வேர்ல்ட் கப் தொடருக்கான சூப்பர் 12 ஆட்டங்களில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
T20 உலக கோப்பை
ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்கிய T20 உலக கோப்பை தொடர் இப்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த தொடரில் இதுவரை மொத்தம் 26 சூப்பர் 12 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளது. இந்த ஆட்டங்களில் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் இதுவரை நடைபெற்ற சூப்பர் 12 ஆட்டங்களின் முடிவில் அதிக விக்கெட் கைப்பற்றியவர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த அன்ரிச் நார்ட்ஜே மொத்தம் 11 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார்.
உலக கோப்பை பரபரப்பில் இந்திய வீரர் செய்த காரியம்…, இணையத்தில் வைரலாகும் பதிவு!!
இவரை தொடர்ந்து இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங், இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன், பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் ஆகியோர் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி 2 ஆம் இடத்தை பிடித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து வீரர் மார்க் வூட் 9 விக்கெட்டுகளுடன் 3 ஆம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளனர்.