T20WC.., டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு., பரபரப்பான இந்த ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள்??

0
T20WC.., டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு., பரபரப்பான இந்த ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள்??
T20WC.., டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு., பரபரப்பான இந்த ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள்??

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

IND VS ENG

2022 T20 வேர்ல்ட் கப் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த தொடரில் இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளனர். எனவே இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆட்டம் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த போட்டியில் இரு அணிகளும் சமபலத்தில் இருப்பதால் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று இப்போது வரை கணிக்க முடியவில்லை. எனவே சுவாரஸ்யமான இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு செல்லும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீர்கள் லிஸ்ட்:

இந்தியா: கேஎல் ராகுல், ரோஹித் சர்மா(கேட்ச்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த்(வ), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

இங்கிலாந்து: ஜோஸ் பட்லர்(w/c), அலெக்ஸ் ஹேல்ஸ், பிலிப் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித்.

  • நேரம்: பிற்பகல் 1.30 PM
  • நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

டாஸ்:

இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்ய மைதானத்தில் களமிறங்கியுள்ளது. அனல் பறக்கும் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள் என இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here