கடைசி நேரத்தில் இந்திய அணிக்கு அடித்த ஜாக்பாட்.., ICC யால் சாதகமாகும் வெற்றி வாய்ப்பு!!

0
கடைசி நேரத்தில் இந்திய அணிக்கு அடித்த ஜாக்பாட்.., ICC யால் சாதகமாகும் வெற்றி வாய்ப்பு!!
கடைசி நேரத்தில் இந்திய அணிக்கு அடித்த ஜாக்பாட்.., ICC யால் சாதகமாகும் வெற்றி வாய்ப்பு!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்கும் நடுவரை ICC அறிவித்துள்ளது. இதைக் கேட்ட இந்திய ரசிகர்கள் இப்போது உற்சாகத்தில் தத்தளித்து வருகின்றனர்.

IND VS ENG

T20 வேர்ல்ட் கப் தொடருக்கான அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நாளை மறுநாள் அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். இந்த போட்டிக்கு நடுவர்களாக குமார் தர்மசேனா மற்றும் பால் ரெய்ஃபெல் ஆகியோரை ICC அறிவித்துள்ளது. அதே போன்று கிறிஸ் கஃப்பானே மற்றும் ராட் டக்கர் ஆகியோரை 3வது மற்றும் 4வது நடுவர்களாக அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பைக் கேட்ட இந்திய ரசிகர்கள் இப்போது உற்சாகத்தில் மிதந்து வருகின்றன. இதற்கு காரணம் இந்த அரையிறுதி ஆட்டத்திற்கு அம்பயராக ரிச்சர்ட் கெட்டில் போரோ நியமிக்காதது தான். ஏனென்றால் இவரை இந்திய அணி விளையாடும் போட்டியில் நடுவராக நியமித்தால் அந்த ஆட்டத்தில் தோல்வி அடைவதாக ரசிகர்கள் நினைத்து கொண்டுள்ளனர்.

ஆனால் அவர்கள் அப்படி நினைப்பது உண்மை தான். காரணம் ICC சார்பில் நடைபெற்ற 2014 டி20 உலகக்கோப்பை, 2016 டி20 உலக கோப்பை, 2015 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி, 2019 ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் இந்தியா விளையாடிய போது இவர் தான் நடுவராக இருந்தார்.

ஆனால் இந்த அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி நாக் அவுட் சுற்றிலே தோல்வி அடைந்து வெளியேறியது. இந்நிலையில் இந்த ஆண்டு உலக கோப்பை தொடரில் இவர் நடுவராக நியமிக்கப்படாததால் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ICC யே இந்திய அணியின் வெற்றிக்கு உதவியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here