T20 உலகக் கிண்ணம்.., ஜிம்பாப்வே அணி பட்டியல் ரிலீஸ்.., டீமில் இடம் பிடித்த முக்கிய நட்சத்திர வீரர்கள்!!

0
T20 உலகக் கிண்ணம்.., ஜிம்பாப்வே அணி பட்டியல் ரிலீஸ்.., டீமில் இடம் பிடித்த முக்கிய நட்சத்திர வீரர்கள்!!
T20 உலகக் கிண்ணம்.., ஜிம்பாப்வே அணி பட்டியல் ரிலீஸ்.., டீமில் இடம் பிடித்த முக்கிய நட்சத்திர வீரர்கள்!!

T20 உலக கோப்பை தொடருக்கான வலுவான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தற்போது அறிவித்துள்ளது.

ஜிம்பாப்வே அணி!!

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் T20 உலக கோப்பை தொடருக்கு 16 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த அணி எர்வின் கிரெய்க் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜிம்பாப்வே அணிக்காக பல சர்வதேச தொடர்களில் கேப்டனாக இருந்து அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். மேலும் இந்த அணியில் முனியோங்கா டோனி, பர்லே ரியான், சகப்வா ரெஜிஸ் போன்ற நட்சத்திர ஆட்டக்காரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ஜிம்பாப்வே அணி T20 உலக கோப்பை தொடருக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டி ஆஸ்திரேலியாவின் பெல்லரிவில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ஜிம்பாப்வே அணி சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைய முடியும்.

ஜிம்பாப்வே அணி :

எர்வின் கிரெய்க் (கேப்டன்), பர்லே ரியான், சகப்வா ரெஜிஸ், சதாரா டெண்டாய், எவன்ஸ் பிராட்லி, ஜாங்வே லூக், மடாண்டே கிளைவ், மாதவேரே வெஸ்லி, மசகட்சா வெலிங்டன், முனியோங்கா டோனி, முஜர்பானி பிளெஸ்ஸிங், நகர்வா ரிச்சர்ட், ரஸா அலெக்ஸாண்டர், ரஸா அலெக்ஸாண்டர், வில்லியா அலெக்ஸாண்டர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

பேக்கப் வீரர்:

தனகா சிவாங்கா, இன்னசென்ட் கையா, கெவின் கசுசா, தடிவானாஷே மருமணி, விக்டர் நியாச்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here