ICC WT20.., மீண்டும் தசுன் ஷனகா தலைமையில் களமிறங்கும் இலங்கை.., அப்போ தரமான சம்பவம் இருக்கு??

0
ICC WT20.., மீண்டும் தசுன் ஷனகா தலைமையில் களமிறங்கும் இலங்கை.., அப்போ தரமான சம்பவம் இருக்கு??
ICC WT20.., மீண்டும் தசுன் ஷனகா தலைமையில் களமிறங்கும் இலங்கை.., அப்போ தரமான சம்பவம் இருக்கு??

இருபது ஓவர் உலக கோப்பை தொடருக்கு தசுன் ஷனகா தலைமையிலான 16 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

T20 உலக கோப்பை

ICC சார்பில் நடைபெறும் T20 உலக கோப்பை தொடர் விரைவில் ஆரம்பமாக உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்போது தங்கள் அணி வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. இந்த அணிக்கு மீண்டும் தசுன் ஷனகா கேப்டனாக களமிறங்குகிறார். இந்த அணி T20 உலக கோப்பை தொடருக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 12 சுற்றுக்கு நுழைய முடியும். இதனால் இலங்கை அணி தகுதி சுற்றுக்கான ஆட்டத்தில் நமீபியா அணியை எதிர்கொள்ள உள்ளது.

MELBOURNE, AUSTRALIA – FEBRUARY 20: Dushmantha Chameera of Sri Lanka is congratulated by team mates after getting the wicket of Josh Inglis of Australia during game five of the T20 International Series between Australia and Sri Lanka at Melbourne Cricket Ground on February 20, 2022 in Melbourne, Australia. (Photo by Quinn Rooney/Getty Images)

மேலும் இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் இலங்கை அணி அண்மையில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் அதிரடியாக விளையாடி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதிலிருந்தே உலக கோப்பை தொடரில் மற்ற அணிகளுக்கு மிக பெரிய சவாலாக இலங்கை அணி இருக்கும் என்று தெரிகிறது. மேலும் அந்த அணியில் உள்ள அனைத்து வீரர்களும் தற்போது நல்ல பார்மில் உள்ளனர். இதனால் T20 உலக கோப்பை பட்டத்தையும் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை அணி:

தசுன் ஷனக (கேட்ச்), தனுஷ்க குணதிலக்க, பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், பானுக ராஜபக்ச, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, மஹீஷ் தீக்ஷனா, ஜெப்ரி வான்டர்சே, வனிந்து ஹசரங்க, டில்ஷான் மதுஷங்க, பிரமோத் மதுஷன், சமிக கருணாரத்னே, லஹிரு குமார.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

காத்திருப்பு வீரர்கள்:

தினேஷ் சந்திமால், அஷேன் பண்டார, பினுர பெர்னாண்டோ, நுவனிடு பெர்னாண்டோ, பிரவீன் ஜெயவிக்ரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here