இன்னும் போட்டியே முடியல – அதற்குள் வீரர்களை புகழ்ந்து தள்ளிய ராகுல்…, பின்னாடி ஆப்பு ஏதும் இருக்குமோ?

0
இன்னும் போட்டியே முடியல - அதற்குள் வீரர்களை புகழ்ந்து தள்ளிய ராகுல்..., பின்னாடி ஆப்பு ஏதும் இருக்குமோ?
இன்னும் போட்டியே முடியல - அதற்குள் வீரர்களை புகழ்ந்து தள்ளிய ராகுல்..., பின்னாடி ஆப்பு ஏதும் இருக்குமோ?

இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் ஆசிய கோப்பையில் விளையாடும் இந்திய வீரர்கள் பற்றி புகழ்ந்தது மட்டுமல்லாமல் டி20 உலக கோப்பையில் எனக்கு பணிச்சுமை இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

பயிற்சியாளர் ராகுல் டிராவிட்!

இந்திய அணி தற்போது ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி தொடர் வெற்றிகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் இந்திய வீரர்களை பற்றி புகழ்ந்தது மட்டுமல்லாமல் டி20 உலக கோப்பையில் எனக்கு எந்த பணி சுமையும் இல்லை என்றும் கூறியுள்ளார். இதை கேட்ட அனைவருக்கும் மிகுந்த வியப்பு ஏற்பட்டது. அதாவது டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்திய அணியும் ஆசிய கோப்பை தொடர் முடிந்தவுடன் டி20 உலக கோப்பைக்கான அணியை அறிவிக்க உள்ளது. இந்த அணியில் ஆசிய கோப்பையில் விளையாடிய அனைத்து வீரர்கள் இடம் பெறுவார்கள் என பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். மேலும் இவர்கள் அனைவருமே தற்போது ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். எனவே அவர்களுக்கு நான் பயிற்சி அளிக்க வேண்டியதே தேவையில்லை. மேலும் ஆசிய கோப்பை தொடர் முடிந்த பிறகு இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் நடைபெற உள்ளது.

இதன் மூலம் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகிக் கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன். ஆசிய கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு பங்காக இருந்துள்ளார். மேலும் அணியில் விளையாடி வந்த ஜடேஜா காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார். இவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதால் டி20 உலக கோப்பையில் இடம் பெற வாய்ப்பு இல்லை என்று தான் தெரிகிறது. இதுவே இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here