Tuesday, August 3, 2021

டி20 உலக கோப்பை: ஒரே பிரிவில் இடம்பெற்ற இந்தியா,பாகிஸ்தான்…!முழு விவரம் உள்ளே!!

Must Read

உலக கோப்பை டி20 போட்டிகளுக்கான அணிகளை பிசிசிஐ  வெளியிட்டு உள்ளது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பிடித்து உள்ளன. இதனால் இந்த உலக கோப்பை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலக கோப்பை டி20 தொடர் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அணிகள் தங்களை தயார்படுத்தி வருகிறது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான அணிகளின் பட்டியல் பிசிசிஐ “ரவுண்டு 1” மற்றும் “சூப்பர் 12”   என 2 பிரிவுகளாக பிரித்து அந்த அணிகளின் பெயர்களை வெளியிட்டு உள்ளது. அதன் படி  “சூப்பர் 12” சுற்றில் இரு பிரிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பிரிவுக்கு நேரடியாக 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. மீதி உள்ள நான்கு இடங்களுக்கு வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட 8 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்க பட உள்ளன. இந்த தகுதி சுற்றில் தேர்வு செய்யப்படும் அணிகள் உலகக் கோப்பை விளையாட தகுதி பெறும்.

இந்நிலையில் சூப்பர் 12″ சுற்றில் அறிவிக்கப்பட்டு உள்ள இரு பிரிவுகளில் குரூப் 1ல்  இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளும், குரூப் 2ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து,  ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகளும் உள்ளன. இவர்களுடன் தகுதி சுற்றில் வெற்றி பெரும் அணியும் சேர்க்கப்படும். இதையடுத்து ஒரே பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம் பிடித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் டிவி நடிகைக்கு அடித்த லாட்டரி…!பிரியா பவானி சங்கர் லிஸ்டில் இணைந்த முக்கிய பிரபலம்!!!

விஜய் டிவி சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் ரக்ஷிதா. இவர் சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்தது போதாதென்று திரைப்படம் மூலமாக ரசிகர்களை கவர...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -