ரோஹித்துக்கு காத்திருக்கும் தலைவலி – சொந்த அணிக்கே ஆப்பு வைக்கும் ஜடேஜா!!

0
ரோஹித்துக்கு காத்திருக்கும் தலைவலி - சொந்த அணிக்கே ஆப்பு வைக்கும் ஜடேஜா.., T20 உலக கோப்பையில் இந்தியா செய்ய போவது என்ன?
ரோஹித்துக்கு காத்திருக்கும் தலைவலி - சொந்த அணிக்கே ஆப்பு வைக்கும் ஜடேஜா!!

காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து விலகிய ஜடேஜா, 20 ஓவர் உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பில்லை என்ற தகவலை BCCI மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகல்?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் ஆல்ரவுண்டர் ஜடேஜா சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். இந்நிலையில் அவர் வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். தற்போது இந்திய அணியில் ஜடேஜா இல்லாதது மீதமுள்ள போட்டியில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் இதன் பிறகு நடைபெறும் அனைத்து போட்டிகளில் ஜடேஜா பங்கேற்பார் என அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் இவர் முழங்கால் அறுவை சிகிச்சை செய்ய உள்ளார். இதனால் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள T20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவலை BCCI மூத்த அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

ஜடேஜா சிகிச்சை மேற்கொண்டு பழைய நிலைக்கு திரும்ப குறைந்தது ஆறு மாதங்களுக்கு மேல் ஆகலாம். எனவே அவர் T20 உலக கோப்பையில் விளையாடுவதற்கு கொஞ்சம் கூட வாய்ப்பில்லை. இதனால் உலகக் கோப்பை தொடரிலிருந்து ஜடேஜா விலகும் பட்சத்தில் அவருக்கு அவரை சமன் செய்யக்கூடிய ஒரு திறமையான ஆள் ரவுண்டர் இந்திய அணிக்கு தேவை என்பதால் இந்திய அணியின் பயிற்சியாளர் உட்பட அனைவரும் அணியை தேர்வு செய்வதற்கு திணறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here