ஜடேஜாவின் இடத்தை பறிக்கும் தமிழக வீரர்.., T20 உலக கோப்பையில் காத்திருக்கும் ட்விஸ்ட்!!!

0
ஜடேஜாவின் இடத்தை பறிக்கும் தமிழக வீரர்.., T20 உலக கோப்பையில் காத்திருக்கும் ட்விஸ்ட்!!!

T20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஜடேஜா விலகியதை தொடர்ந்து, அவரின் இடத்தை தமிழக வீரர் தக்க வைத்துக் கொள்வார் என முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

ஜடேஜா VS அஸ்வின்!!

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் T20 உலக கோப்பை தொடர் கோலாகலமாக அரங்கேற உள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளின் வீரர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியாகியது. இதில் இந்திய அணியும் தரமான வீரர்களை தேர்வு செய்து அண்மையில் வெளியிட்டது. இந்த அணியில் ஆல்ரவுண்டர் ஜடேஜா முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக பங்கேற்கவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் ஜடேஜா இல்லாத குறையை தீர்க்க தமிழக வீரரான அஸ்வினை அணியில் எடுத்துள்ளனர். இந்நிலையில் அஸ்வின் பற்றி டேனியல் வெட்டோரி சில கருத்துக்களை முன்வைத்துள்ளார். இவர் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. டேனியல் கூறுகையில். அஸ்வின் இந்திய அணிக்காக பல டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

மேலும் இவரது பந்து வீச்சின் மூலம், திறமையான பேட்ஸ்மேன்களை அசால்ட்டாக வீழ்த்தி விடுவார். மேலும் T20 உலகக்கோப்பையில் அஸ்வின் சிறப்பாக விளையாடினால் ஜடேஜாவின் இடத்தை தனதாக்கி கொள்வார் என டேனியல் தெரிவித்துள்ளார். இவரை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் நாதன் லியான், டாப் ஸ்பின் பந்து வீச்சின் மூலம் எதிர் அணிக்கு அஸ்வின் மிகப்பெரிய சவாலாக இருப்பார் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here