T20 இந்திய அணிக்கு தேர்வான 2 தமிழக வீரர்கள்..., ஜூன் மாதம் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்க திட்டம்!!
இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள், சர்வதேச அளவில் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். இவர்களைப் போலவே, மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் அணிகளும் தங்களது திறமையை வெளிப்படுத்தி அசத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதத்தில், பார்வையற்றோருக்கான டி20 உலக கோப்பை தொடரை, 3 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று ஹாட்ரிக் சாதனையை படைத்தது.
இதன் தொடர்ச்சியாக தற்போது, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் கிளப் அணிகளுக்கு எதிராக வரும் ஜூன் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை டி20 தொடரை இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடருக்கான, இந்திய மாற்றுத்திறனாளி அணியை நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த இரு வீரர்கள் தேர்வாகி உள்ளனர்.
அதாவது, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, ஆல்ரவுண்டரான சாகுல் ஹமீது மற்றும் வலது கை சுழற்பந்து வீச்சாளரான லட்சுமண காந்தன் இடம் பெற்றுள்ளனர். இந்த தொடருக்கான இந்திய அணியை, மதுரையை சேர்ந்த, சச்சின் சிவா கேப்டனாக இருந்து வழி நடத்த உள்ளார். மேலும், அப்பாஸ் அலி இந்திய அணிக்கு பயிற்சி அளிக்க உள்ளார்.