இந்திய அணியின் தொடக்க வீரர் இனி இவர்கள் தான்?? பிசிசிஐ எடுக்க போகும் அதிரடி மாற்றங்கள்!!

0
இந்திய அணியின் தொடக்க வீரர் இனி இவர்கள் தான்?? பிசிசிஐ எடுக்க போகும் அதிரடி மாற்றங்கள்!!
இந்திய அணியின் தொடக்க வீரர் இனி இவர்கள் தான்?? பிசிசிஐ எடுக்க போகும் அதிரடி மாற்றங்கள்!!

இந்திய அணி நடப்பு டி20 உலக கோப்பையை வெல்ல தவறியதால், தொடக்க வீரர்களை மாற்றி அமைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்திய அணியின் தொடக்கம்:

டி20 உலக கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி பவர் பிளேயில் படும் மோசமாக சொதப்பியதையடுத்து, தொடக்க வீரர்களை மாற்றியமைக்கும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது, நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் கே எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா கத்துகுட்டி அணிகளுக்கு எதிராக மட்டுமே ரன்களை சேர்க்க முயற்சித்து இருந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பெரியளவிலான அணிகளுக்கு எதிராக வேகமாக பெவிலியன் திரும்பி, அணியின் ஸ்கோரை உயர்த்துவதற்கு தவறினர். இதன் விளைவால், பிசிசிஐயானது அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை ஆகிய தொடர்களில் சிறப்பான தொடக்கத்தை அமைக்க வீரர்களை தயார்படுத்த உள்ளது. இதனால், எதிர்வரும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இருந்தே செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இருக்கு.., வாரிசு படத்துல ஒரு சம்பவம் இருக்கு.., லீக்கான ஷூட்டிங் ஸ்பாட் பிக்ஸ்..,வெயிட்டிங்கில் வெறியாகும் ரசிகர்கள்!!

இதில், டி20 போட்டிகளில், சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், பிரித்வி ஷா இவர்களில் ஒருவர் இஷான் கிஷனுடன் இணைந்து, தொடக்கம் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல, ஒரு நாள் போட்டிகளில், கேப்டன் என்ற காரணத்தால் ரோஹித்தும், இவருடன் இணைந்து ஷிகர் தவானும் உலக கோப்பைக்கான தொடக்க வீரர்களாக களமிறங்க பயிற்சி பெறுவார்கள் என எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன.  இந்த முடிவுகள் உறுதியானால், கே எல் ராகுல் நடுவரிசையில் தான் களமிங்கக்கூடும். இது குறித்த அறிவிப்புகளை விரைவில் BCCI வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here