டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைப்பு – வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..?

0

ஆஸ்திரேலியா டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பது குறித்து அகாரிகப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.

டி20 உலக கோப்பை ஒத்திவைப்பு..?

ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற அக்டோபர் மாதம் 18ம் தேதியில் இருந்து நவம்பர் மாதம் 15ம் தேதி வரை நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இரண்டு முறை ஐசிசி இதுகுறித்து முடிவு எடுக்க முடியாமல் அதிகாரப்பூர்வ அறிப்பை ஒத்தி வைத்தது. இதற்கிடையில் தற்போதுள்ள சூழ்நிலையில் டி20 உலக கோப்பையை நடத்துவதற்கு சாத்தியம் இல்லை என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

இந்நிலையில் ஐசிசி கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. அப்போது டி20 உலக கோப்பையை தொடரை ஒத்திவைப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here