டி.ராஜேந்தர் ஆரம்பிக்கும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் – சிம்பு இணைவாரா?? வெளியான தகவல்!!

0

தமிழ் திரையுலகில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு சங்கம் இருப்பது பொதுவான ஒன்று. அந்த வகையில் ஒன்று தான் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இந்நிலையில் டி.ராஜேந்தர் தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளனர். இதில் சிம்புவும் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளர் சங்கம்

தமிழ் சினிமாவில் திரைப்பட தயாரிப்பாளர்ககு என்றே தனியாக தயாரிப்பாளர்கள் சங்கம் என்று தனியாக உள்ளது. மேலும் பிலிம் சேம்பர் மற்றும் கில்டு என்ற அமைப்பும் உள்ளது. இந்நிலையில் புதிய அமைப்பும் ஒன்று உருவானது. இதனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் பாரதி ராஜா தலைமையில் ஒரு சங்கத்தை உருவாக்கினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

barathi raja
barathi raja

இதற்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்று இந்த சங்கம் அழைக்கப்பட்டது. எனவே போன மாதம் 22 ஆம் தேதி தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் மறைந்த முன்னாள் தயாரிப்பாளர் ராமநாராயணன் மகனான முரளி ராம நாராயணன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட டி.ராஜேந்தர் மற்றும் பி.எல்.தேனப்பன் தோல்வியடைந்தனர்.

இதனால் டி.ராஜேந்தர் இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாற்றி வந்தார். அதன் பிறகு அவர் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். அந்த சங்கத்தின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில், செயலாளர்கள் என். சுபாஷ் சந்திரபோஸ், ஜேஸ்கே சதிஷ்குமார், பொருளாளர் கே. ராஜன் போன்றார் இணைந்துள்ளனர்.

இந்த சங்கத்தை பற்றி பேட்டியளிக்கையில் கூறியதாவது, இந்த சங்கத்தின் மூலம் சிறிய தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தவும் vps போன்ற செலவீனங்களை குறைக்கவும் இந்த சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான செலவீனங்களை குறைத்து குறைந்த முதலீட்டில் படங்களை இயக்க உதவி புரிவோம்.

மேலும் திரைப்படங்களை வெளியிட முடியாமல் தவிக்கும் தயாரிப்பாளர்களுக்கு அந்த படங்களை திரையிடுவதற்கான வழிகாட்டுவோம். வெளிநாட்டு உரிமை, ஓடிடி தளம், கேபிள் டிவி வியாபாரத்தை அதிகரித்து லாபம் ஈட்ட முயற்சிப்போம் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த சங்கத்தின் சிம்புவும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here