அமெரிக்கா பறக்கும் டி.ஆர்  – தந்தைக்காக காத்திருக்கும் சிம்பு! நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன கமல்!!

0
நடிகர் சிம்புக்கு விரைவில் திருமணம்.. ஆனா அதுல ஒரு சிக்கல் - டி.ஆர். ராஜேந்தர் அதிர்ச்சி தகவல்!
நடிகர் சிம்புக்கு விரைவில் திருமணம்.. ஆனா அதுல ஒரு சிக்கல் - டி.ஆர். ராஜேந்தர் அதிர்ச்சி தகவல்!

உயர் சிகிச்சைக்காக பிரபல நடிகர் டி.ராஜேந்திரன் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், உலகநாயகன் கமல் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

 ஆறுதல் சொன்ன கமல் :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்திரன், உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் சென்னையில் உள்ள இராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியானது. அண்மையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தார்.

ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன், தனது தந்தையின் மருத்துவப் பணிகளை கவனிக்க சிம்பு முன்கூட்டியே அமெரிக்கா சென்று, அங்கு தன் தந்தைக்காக காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, தற்போது டி.ராஜேந்தர் அமெரிக்கா செல்வதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உலகநாயகன் கமல் அவரை நேரில் சந்தித்து விரைவில் நலம் பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here