வலை பயிற்சியில் மீண்டும் ரஹானே & புஜாராவை காலி செய்த நடராஜன் – வைரலாகும் வீடியோ!!

0

இந்திய அணி வீரர்கள் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மோதவிருக்கும் 2வது டெஸ்ட் போட்டிக்காக தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சியின் போது மீண்டும் நடராஜன் தனது அசத்தலான பௌலிங்கால் ரஹானே மற்றும் புஜாராவின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி உள்ளது. இந்த தொடர் மூலம் அறிமுகமான தமிழக வீரர் நடராஜன் தனது பவுலிங்கால் ஆஸ்திரேலிய அணி வீரர்களை திணறடித்து வந்தார். டி 20 தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு மிகவும் முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் இவர் டெஸ்ட் போட்டிகளில் அணியில் சேர்க்கப்படவில்லை. இது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. ஆனால் அவர் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் பேட்ஸ்மேன்களுக்கு வலை பயிற்சி செய்யும் போது பவுலிங் செய்து வருகிறார்.

30 நிமிடத்தில் காலி செய்த நடராஜன்:

இந்திய அணி வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்ட போது நடராஜன் பவுலிங் செய்தார். அவர் பவுலிங் செய்ய தொடங்கிய 30வது நிமிடத்தில் இந்திய அணியின் வலுவான பேட்ஸ்மேன்களான ரஹானே மற்றும் புஜாராவை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதனை பார்த்த இந்திய அணியின் பயிற்சியாளர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

ஷாருக்கானாக மாறிய டேவிட் வார்னர்!!

முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது. இதனால் 2 வது போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்திய அணி வீரர்கள். இப்போட்டியில் விராட் கோஹ்லி இல்லாத நிலையில் கேப்டனாக ரஹானே அணியை வழி நடத்துவார்.

கடந்த முறை போலவே இந்த முறையும் நடராஜன் வலை பயிற்சியில் தனது லென்த்தை மாற்றி மாற்றி பவுலிங் செய்து தற்போதைய கேப்டன் ரஹானே மற்றும் புஜாராவின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஆனால் இந்த முறை வெறும் 15 நிமிடத்தில் இதை செய்து அனைவரையும் அசர வைத்துள்ளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here