சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி!!

0
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி!!
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி!!

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்திய வீரர்கள் ஒற்றையர் பிரிவில் ஏமாற்றிய நிலையில், இரட்டையர் பிரிவில், சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி காலிறுதிக்கு முன்னேறி அசத்தி உள்ளனர்.

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்:

சர்வதேச வீரர்களுக்கு இடையே, சுவிட்சர்லாந்தின் பாசலில் உள்ள செயின்ட் ஜாகோப்ஷேலில் சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், முதல் சுற்றை வென்ற இந்தியாவின் பி வி சிந்து, 2வது சுற்றில் இந்தோனேஷியாவின் புத்ரி குசுமா வர்தானியை எதிர்த்துப் போட்டியிட்டார். இந்த போட்டியில், தனது முதல் செட்டை (15-21) இழந்த சிந்து, 2வது செட்டை எளிதாக (21-12) வென்றார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதையடுத்து, வெற்றியாளரை தீர்மானிக்கும் 3 வது செட்டுக்கு போட்டி நகர்ந்தது. இதில், வெற்றிக்காக போராடிய சிந்து 18-21 என்ற கணக்கில் இந்தோனேஷியா வீராங்கனையிடம் தோல்வியை தழுவினார். இதன் மூலம் சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து வெளியேறினார். இவரை தொடர்ந்து, ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ் பிரணாய், கிடம்பி ஸ்ரீகாந்த், மிதுன் மஞ்சுநாத் ஆகியோர் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து, சுவிஸ் ஓபனில் இருந்து வெளியேறினர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நகை திருட்டு விவகாரம்., அவிழும் மர்ம முடிச்சுகள்.., மேலும் ஒரு நபரை கைது செய்த காவல்துறை!!

ஆனால், இந்த ஓபன் பேட்மிண்டன் தொடரில், ஆடவர் இரட்டையருக்கான பிரிவில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி தனது 2 வது செட்டில் தென் கொரியாவின் F J லீ-F C லீ க்கு எதிராக விளையாடினர். இதில், முதல் செட்டை இழந்த இந்திய ஜோடி அடுத்த இரண்டு செட்டை கைப்பற்றி (12-21, 21-17, 28-26) காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here