தமிழகத்தில் பரவும் “பன்றிக்காய்ச்சல்”.,, பள்ளி சிறுவன் உட்பட 2 பேருக்கு தொற்று உறுதி! பொதுமக்கள் பீதி!!

0
தமிழகத்தில் பரவும்
தமிழகத்தில் பரவும் "பன்றிக்காய்ச்சல்".,, பள்ளி சிறுவன் உட்பட 2 பேருக்கு தொற்று உறுதி! பொதுமக்கள் பீதி!!

தமிழகத்தில் புதிய வகை காய்ச்சல் வேகமெடுத்துள்ளது, இதையடுத்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பன்றி காய்ச்சல்:

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக காய்ச்சலால் பாதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் கடுமையான காய்ச்சல் பரவல் இருப்பதால், அங்கு பள்ளிகளுக்கு சனிக்கிழமை முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த சமயத்தில், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவன் உட்பட இருவருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடியை சேர்ந்த 59 வயது நபர் ஒருவருக்கும், மேலும் கொரடாச்சேரி வட்டாரத்தைச் சேர்த்த 10 வயது பள்ளி மாணவருக்கும் பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை பெற்று கொண்டனர். மேலும் சிகிச்சையின் பலனாக தற்போது நலமுடன் இருப்பதாகவும், அவர்கள் வீடு திரும்பியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஆதார் கார்டில் உடனேஇந்த அப்டேட்டை செஞ்சுருங்க.,, இல்லைனா சிக்கல் தான்!!

இந்நிலையில் திருவாரூர் ஆட்சியர் காயத்ரி, மாவட்ட முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தவும் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவன் படிக்கும் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here