Thursday, April 25, 2024

சுவையான ஸ்வீட் ரெசிபி – ட்ரை பண்ணி பாருங்க!!

Must Read

நமக்கு பிடிக்கும் ரெசிபி என்றல் அது ஸ்வீட் தான். அதில் இன்று ஈஸியா செய்யும் ஸ்வீட் ஒன்றை பார்க்க போகிறோம்.

தேவையான பொருட்கள்:

பால் – 1 கப்
மைதா மாவு – 1 கப்
பெருஞ்சீரகம் – 3 தேக்கரண்டி
சீனி – 2 கப்
தண்ணீர் – 1 கப்
நெய் – 1 கப்
கோயா – 1/4 கப்

செய்முறை :

  • ஒரு பாத்திரத்தில், கோயா மற்றும் பால் சேர்த்து நன்றாக கலக்கவும். கோயா பாலுடன் முழுவதுமாக கலந்ததும், மைதாவைச் சேர்த்து, பொருட்களை மீண்டும் நன்றாக கலக்கவும்.
  • இதில் 3 டீஸ்பூன் பெருஞ்சீரகம்/சோம்பு சேர்த்து மாவு கலவை நன்கு பதத்திற்கு வரும்வரை நன்றாக கலக்கவும். உங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படி செய்து கொள்ளுங்கள்.
  • தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது இரண்டு கப் சர்க்கரை சேர்த்து 6-7 நிமிடங்கள் சமைக்கவும். இந்த சர்க்கரை தண்ணீர் கொதிக்கும் போது அதில் ஒரு சிட்டிகை ஏலக்காய் சேர்க்கவும். சர்க்கரை பாகு நன்றாக கொதித்து பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  • ஒரு பாத்திரத்தில் நெய் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவு கலவையை எடுத்து கொஞ்சமாக அந்த ஊற்றவும்.நடுத்தர தீயிலோ அல்லது குறைந்த தீயிலோ இதை சமைக்கவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வரும் வரை இதை சமைக்கவும்.
  • சமைத்த மல்புவாவை சர்க்கரை பாகில் நனைத்து எடுக்கவும். நீங்கள் அதிக இனிப்பை விரும்பினால், மல்புவாவை சர்க்கரை பாகில் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  • ஒரு சிட்டிகை ஏலக்காய் மற்றும் துருவிய பாதாம் சேர்த்து மல்புவாவை அலங்கரித்து பரிமாறவும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -