நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு., தீவிர அறுவை சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்ததாக பதிவு!!

0

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், கடந்த இரு தினங்களுக்கு முன் தீவிர மாரடைப்பால் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது நலமாக இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

சுஷ்மிதா சென்:

பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகையான சுஷ்மிதா சென் தமிழில் ரட்சகன் படத்தின் மூலம் அறிமுகமானார். மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இவர், பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, தனக்கு தீவிர மாரடைப்பு ஏற்பட்டதாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டு இதயத்தில் ஸ்டன்ட் பொருத்தப்பட்டுள்ள தாகவும், தனக்காக உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், நாம் செய்யும் உதவி தான் நம்மை காக்கும் என் தந்தை சொன்னது, எனக்கு இப்போது நினைவில் இருக்கிறது.

அதன்படி, என் இதயத்திற்கு நெருக்கமானவர்கள் என்னை காப்பாற்றி இருக்கிறார்கள் என குறிப்பிட்டார். இவரின் இந்த திடீர் பதிவு பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here