“எங்கள் வெற்றிக்கு காரணம் இதான்” – ரகசியத்தை உடைத்த ஆட்டநாயகன் சூர்யகுமார்!!!!

0
"எங்கள் வெற்றிக்கு காரணம் இதான்" - ரகசியத்தை உடைத்த ஆட்டநாயகன் சூர்யகுமார்!!!!

இலங்கை அணிக்கு எதிரான 3 வது T20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கான காரணம் குறித்து சூர்யகுமார் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

இந்திய அணி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரின் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க சூர்யகுமார் நிலைத்து நின்று, சதம் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகை செய்தார். அந்த வகையில் 20 ஓவர் முடிவில் இந்திய அணியினர் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்து இலங்கை அணிக்கு இலக்கு நிர்ணயித்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

229 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதன் மூலம் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கைக்கு எதிரான டி20 தொடரை சொந்த மண்ணில் வென்று அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சூரிய குமார் வெற்றி குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

கதிரிடம் தொடரும் ஷிவினின் லவ் லீலைகள்.., இரவு நேர Unseen காட்சிகள் வைரல்!!

அதாவது, ஒரு போட்டிக்கு களமிறங்குவதற்கு முன்பாகவே மைதானத்தின் சூழல் மற்றும் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் விதம் அனைத்தையும் நன்கு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் எந்த இடத்தில் பவுண்டரி அடித்தால் எளிதாக செல்லும் என்பதை கணித்து ஆட வேண்டும் என கூறியுள்ளார். இது தவிர இந்த வெற்றிக்கு நாங்கள் மட்டுமல்லாமல் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் ஒரு முக்கிய காரணம் தான் என புகழாரம் சூட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here