“இதை ஏற்றுக் கொள்வதில் எனக்கு வெட்கமில்லை”…, சூர்யகுமார் யாதவின் ஓபன் டாக்!!

0
"இதை ஏற்றுக் கொள்வதில் எனக்கு வெட்கமில்லை"..., சூர்யகுமார் யாதவின் ஓபன் டாக்!!

இந்தியாவின் 360 டிகிரி நாயகன் மற்றும் ஐசிசி டி20 யின் நம்பர் 1 பேட்ஸ்மேன்னான சூர்யகுமார் யாதவ் டி20 வடிவிலான தொடரில் தொடர்ந்து அசத்தி வருகிறார். சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தடுமாறிய இவர், டி20 தொடரில் தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கினார். இதில், குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் எதிரான 3வது டி20 போட்டியில் கூட 44 பந்தில் பவுண்டரி சிக்ஸர் என தொடர்ந்து விளாசி 83 ரன்கள் குவித்தார். இதன் மூலம், இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் இவர் தட்டி சென்றார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ச்சீ., நிறுத்து., கந்துவட்டிக்காரன் உண்மைய சொல்லிட்டான்., விஜயாவை கிழித்து தொங்க விட்ட முத்து!!

இருப்பினும், ஸ்ரேயாஸ் ஐயரின் ஒருநாள் தொடருக்கான இடத்தை சூர்யகுமார் யாதவ் பிடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவரது ஆட்டத்தின் போக்கும் அனைத்தும் டி20 வடிவிலேயே இருப்பதால் ஒருநாள் தொடரில் சூர்யகுமாரின் இடம் கேள்வி குறியாகி உள்ளது. இது குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், எனது ODI ஸ்கோர் மிகவும் மோசமாக உள்ளதை, ஏற்றுக் கொள்வதில் எனக்கு வெட்கமில்லை, நேர்மை தான் முக்கியம். பயிற்சியாளர் ராகுல் சார் மற்றும் ரோஹித் சூழ்நிலைக்கு ஏற்ப அதிகமாக பயிற்சி செய்து விளையாட வேண்டும் என அறிவுறுத்தினார்கள். இதன்படி இனி சிறப்பாக செயல்பட்டு அணியுடன் இணைவேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here