இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்திய அணியானது இதுவரை விளையாடிய 6 போட்டிகளையும் வென்று அசத்தி உள்ளது. இந்த தொடர் வெற்றியை தக்க வைக்கும் நோக்குடன் இந்திய அணி நாளை (நவம்பர் 2) இலங்கை அணியை எதிர்த்து போட்டியிட உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த போட்டிக்காக இந்திய அணியானது தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்திய அணியின் 360 டிகிரி நாயகனான சூர்யகுமார் யாதவ் ரசிகர்களுக்காக செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, சில ரசிகர்களை காண சூர்யகுமார் யாதவ் முகமூடி, கண்ணாடி அணிந்து பேட்டி காண கேமராமேனாக மாறி மரைன் டிரைவிற்கு சென்றுள்ளார்.அடையாளம் காண முடியாத அளவுக்கு உள்ள இவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலக கோப்பையில் வெற்றி பாதைக்கு திரும்பிய பாகிஸ்தான்…, சாதனைகளை குவித்து அசத்திய வீரர்கள்!!