சூர்யாவை வாய்க்கு வந்தபடி திட்டிய பாலா – பாதியில் நிறுத்தப்பட்ட Surya41 ஷூட்டிங்! ரசிகர்கள் அதிர்ச்சி!!

0
சூர்யாவை வாய்க்கு வந்தபடி திட்டிய பாலா - பாதியில் நிறுத்தப்பட்ட surya 41 ஷூட்டிங்! ரசிகர்கள் அதிர்ச்சி!!
சூர்யாவை வாய்க்கு வந்தபடி திட்டிய பாலா - பாதியில் நிறுத்தப்பட்ட surya 41 ஷூட்டிங்! ரசிகர்கள் அதிர்ச்சி!!

இயக்குனர் பாலா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்து வந்த surya 41 படத்தின், படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக, அதிரடி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதிரடி தகவல்:

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பாலா. இவர் இயக்கத்தில் வெளிவந்த, நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி, அவன் இவன் உள்ளிட்ட அனைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அண்மையில் நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து, வர்மா என்ற பெயரில் எடுத்த படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த இவர், சமீப காலமாக எந்த படத்தையும் இயக்கவில்லை. இந்த நிலையில், சூர்யாவின் 41 வது படத்தை பாலா இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி, ராமேஸ்வரம் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்று வந்தது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவனாக நடிகர் சூர்யா நடிப்பதாக தகவல் வெளியாகியது. தற்போது, ஷூட்டிங் ஸ்பாட்டில்  நடிகர் சூர்யாவை இயக்குனர் பாலா கண்டபடி திட்டியதாகவும், இதனால் கடுப்பான சூர்யா படப்பிடிப்பு தளத்தில் இருந்து பாதியிலேயே சென்றுவிட்டதாகவும் பேசப்படுகிறது. இதனால், சூர்யா 41  படப்பிடிப்பு பாதியிலேயே நின்று போனதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here