ரோலக்ஸ் கேரக்டரை மீண்டும் கையிலெடுக்கும் சூர்யா – பிரம்மாண்ட இயக்குனர் படத்தில் கிடைத்த வாய்ப்பு!!

0
ரோலக்ஸ் கேரக்டரை மீண்டும் கையிலெடுக்கும் சூர்யா -  பிரம்மாண்ட இயக்குனர் படத்தில் கிடைத்த வாய்ப்பு!!
நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்தது போல, இயக்குனர் ஷங்கர் இயக்கும் ராம் சரண் படத்தில் கெஸ்ட் ரோல் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவுக்கு வாய்ப்பு :

உலகநாயகன் கமல் நடிப்பில், லோகேஷ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில், ரோலக்ஸ் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்து அசத்தியிருந்தார். இந்த கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில், இந்த படத்தின் வெற்றிக்காக நடிகர் சூர்யாவுக்கு கமல் ரோலக்ஸ் வாட்ச் பரிசாக கொடுத்து அசத்தியிருந்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து, நடிகர் சூர்யா பாலாவுடன் வணங்காமுடி, வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, பாலிவுட்டில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் ஆர்சி 50 என்கிற படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார்.

அதுவும் விக்ரம் படத்தின் ரோலக்ஸ் மாதிரி ஒரு வலிமையான கதாபாத்திரத்தில் இவர் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய தகவல், சூர்யா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here