தனக்கு வந்த சோதனையை சாதனையாக மாற்றிய சுவாரஸ்யம் – தம்பி ராமையா மகனின் வேற லெவல் பர்பாமன்ஸ்!!

0

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி வேற லெவலில் விளையாடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

சிரிக்க வைத்த பிரபலத்தின் வாரிசு:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய ரியாலிட்டி ஷோவில் ஒன்று சர்வைவர்.  தென் ஆப்ரிக்க தீவில் களமிறக்கப்பட்டுள்ள போட்டியாளர்களுக்கு தீவிர டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு நிகழ்ச்சியின் முடிவில் வெற்றி பெரும் நபருக்கு ஒரு கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வகையில், நேற்றைய எபிசோடில் டாஸ்கில் தோற்ற விக்ராந்த் தலைமையிலான அணிக்கு ஒரு பனிஷ்மென்ட் தரப்பட்டது.

அதாவது, குறிப்பிட்ட இந்த டாஸ்கில் தோற்ற பொறுப்பை அணியின் போட்டியாளர் உமாபதி எடுத்து கொண்டார்.  சர்வைவர் டீம் தங்களுக்கு கொடுத்த  10 கிலோ மணல் மூட்டையை ஒரு மணி நேரம் தூக்கி சுமக்கும் பெனால்டி டாஸ்கை ஜாலியாக எடுத்து கொண்டு இவர் செய்து முடித்தார். மேலும் உமாபதி நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்து ஒழுங்காக ஒர்கவுட் செய்யவில்லை, இந்த மணல் மூட்டை டாஸ்கை கொடுத்து அந்த குறையை சர்வைவர் டீம் நிவர்த்தி செய்து விட்டதாக நக்கலாக தெரிவித்தார். இவர் செய்த குறும்பு தனங்களை பார்த்த ரசிகர்கள் சிரிப்பலையில் மூழ்கினார்கள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here