நடுக்காட்டில் 100 நாட்கள்.., தொகுத்து வழங்கும் சிம்பு! பிக் பாஸ்னு நெனச்சீங்களா??

0
சட்டையை கழட்ட சொன்னதால் படத்தை நிறுத்திய சிம்பு? பத்து தல இயக்குனர் கொடுத்த விளக்கம்!

தமிழ் திரையுலகில் சிறு வயதில் இருந்தே தனது முகத்தை மக்களுக்கு காட்டி வந்தவர் தான் சிம்பு என்றழைக்கப்படும் சிலம்பரசன் ஆவர். இவர் தனது அப்பாவின் படங்களில் சிறு சிறு வேடங்களில் தொடங்கி பின்னர் தனக்கென ஒரு பாதை அமைத்து அதில் பயணித்தவர். இந்நிலையில் Survivor 2021 என்ற இன்டர்நேஷனல் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிம்பு என்றாலே தனி ஸ்டைல் தான் அவர் நடித்த தமிழ் படங்களில் அதை நம்மால் பார்த்திருக்க முடியும். அவரின் படங்கள் அவருக்கே உரிய தனித்துவதில் அமைய பெற்றிருக்கும். அவரின் படங்கள் நல்ல வரவேற்பையும் வசூல் சாதனையையும் படைத்தவை. ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் நினைத்தனை போல் அல்லாமல் ஏமாற்றத்தையே தந்தது. இந்நிலையில் இவர் தற்போது மாநாடு, பத்து தல போன்ற படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில்,பிரபல நடிகர்கள் பலர் பல ரியாலிட்டி ஷோகளுக்கு தொகுப்பாளராக களமிறங்கி வருகின்றனர். அந்த வரிசையில் சிம்புவும் ஒரு இன்டர்நேஷனல் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும் Survivor 2021 நிகழ்ச்சிக்காக தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு போன்றோரை கேட்டதாகவும் அதற்கு சிம்பு தரப்பு ஒத்துக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Survivor 2021 ஷோவானது இதுவரை 40 சீசன் கடந்த நிகழ்ச்சி ஆகும். அந்த நிகழ்ச்சியின் மையம் ,ஒரு தீவின் விடப்படும் 16 போட்டியாளர்கள் அந்த தீவின் சூழலை எவ்வாறு கையாளுகின்றனர் என்பதே ஆகும். மேலும் அவர்களுக்கு பிக் பாஸ் போல பல டாஸ்களும் கொடுக்கப்படும், அங்கு எலிமினேஷன்களும் உண்டு. இவையனைத்தையும் சமாளித்து 90 முதல் 100 வரை நீண்டு இருப்பவரே அந்த போட்டியின் வெற்றியாளர் ஆவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here