இயக்குனர் நெல்சனுக்கு கிடைத்த சர்பிரைஸ்….,இத எதிர்பாக்கலையே….,

0
இயக்குனர் நெல்சனுக்கு கிடைத்த சர்பிரைஸ்....,இத எதிர்பாக்கலையே....,
இயக்குனர் நெல்சனுக்கு கிடைத்த சர்பிரைஸ்....,இத எதிர்பாக்கலையே....,

நடிகர் ரஜினியை வைத்து ‘ஜெயிலர்’ திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் நெல்சனுக்கு நடிகர் ஜாக்கி ஷெராப் சர்பிரைஸ் கிப்ட் ஒன்றை வழங்கியுள்ளார்.

நெல்சனுக்கு கிடைத்த சர்பிரைஸ்

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். இவர் தற்போது நடிகர் ரஜினிகாந்தை வைத்து ‘ஜெயிலர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அந்த வகையில், ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து பிரபல மலையாள நடிகர் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், நடிகைகள் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் ‘ஜெயிலர்’ படத்தை தயாரிக்கிறது. இப்போது, நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஜூனியர் NTR உடன் இணையும் தனுஷ்?….,அப்டேட் நாளை ரிலீஸ்….,

இந்த நிலையில், திரைப்பட படப்பிடிப்பின் போது இயக்குனர் நெல்சனுக்கு யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சர்பிரைஸ் கிஃப்ட் கிடைத்துள்ளது. அதாவது, நடிகர் ஜாக்கி ஷெராப் இயக்குனர் நெல்சனுக்கு ஸ்கூட்டர் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை இயக்குனர் நெல்சன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட அது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here