“சச்சின், யுவராஜ் போல் உள்ள இந்த வீரருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுங்கள்”…, சுரேஷ் ரெய்னாவின் அதிரடி பேச்சு!!

0

சச்சின், யுவராஜ் சிங் போன்ற ஆல் ரவுண்டரான இந்த வீரருக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

சுரேஷ் ரெய்னா:

அக்டோபர் மாதம் இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் தான், சர்வதேச அணிகள் அனைத்தும், மற்ற அணிகளுக்கு எதிராக அதிக அளவில் ஒருநாள் தொடரில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த வகையில் தான் இந்திய அணி, பல திட்டங்களுடன் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன.

இந்த ஆண்டு தொடக்கத்திலேயே, ஒரு நாள் உலகக் கோப்பைக்காக பிசிசிஐயானது 20 வீரர்களை தேர்வு செய்து வைத்துள்ளதாகவும், அவர்களுக்கு தான் அதிக அளவில் ஒருநாள் தொடரில் சமீபகாலம் வாய்ப்பு தரப்படும் எனவும் அறிவித்திருந்தது. இந்த 20 பேரில், ஆல் ரவுண்டரான தீபக் ஹூடாவும் இருந்தால், பிளேயிங் லெவனில் இவருக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

மேலும், ஜடேஜா மற்றும் அக்சார் பட்டேல் சுழற்பந்து வீச்சுக்கு உதவுவது போல. தீபக் ஹூடா வேகப்பந்து வீச்சுக்கு அதிக அளவில் கை கொடுப்பார் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, சச்சின் மற்றும் யுவராஜ் சிங் போன்ற ஆல் ரவுண்டர்கள் திறனை தீபக் ஹூடா கொண்டுள்ளார். இவருக்கு பிளேயிங் லெவனில் அதிக வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில், இந்திய அணிக்கு பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிற்கும் பலம் சேரும் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here