“இவர் தான் இந்திய அணிக்கு நிலையான கேப்டன்”…, சுரேஷ் ரெய்னா பளிச் பேட்டி!!

0
"இவர் தான் இந்திய அணிக்கு நிலையான கேப்டன்"..., சுரேஷ் ரெய்னா பளிச் பேட்டி!!

இந்திய அணி கடந்த ஆண்டு பெரிய அளவிலான தொடர்களை வெல்லாததால், அணியில் பல மாற்றங்களை செய்ய பிசிசிஐயானது முடிவெடுத்தது. இதன் படி, இந்த வருடத்தின் முதல் நாளில், பிசிசிஐயின் தலைவர், செயலாளர், இந்திய அணியின் பயிற்சியாளர் உள்ளிட்டவர்கள் இணைந்த கூட்டம் ஒன்று கூடியது. இந்த கூட்டத்தின் முடிவில், இந்திய அணி குறித்த பல முடிவுகள் எடுக்கப்பட்டு இருந்தன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில், குறிப்பாக ரோஹித் சர்மா இனி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கு மட்டுமே இந்திய அணியை வழிநடத்துவார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், டி20 போட்டிகளுக்கான எதிர்கால கேப்டன் குறித்து எந்த ஒரு முடிவையும் பிசிசிஐயானது வெளியிட வில்லை. மேலும், எதிர்வரும், 50 ஓவர் உலக கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட தொடர்களுக்கு பிறகு ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்க படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

IND vs SL T20: இந்தாண்டின் முதல் தொடர்., சொந்த மண்ணில் வெற்றியை உறுதி செய்யுமா?

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா மிகவும் நிலையான கேப்டன் ஆவார் என்று கூறியுள்ளார். மேலும், இவரது கேப்டன்சிக்கு அதிக நேரம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி பெரிய அளவிலான தொடர்களை கைப்பற்றாவிடிலும், பல இருதரப்பு தொடர்களை வென்றுள்ளது. இதே போல, ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிக முறை கோப்பையை வென்றதற்கும் ரோஹித் சர்மா கேப்டன்சி முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here