
நடப்பு ஐபிஎல் தொடரில், அசத்தி வரும் இந்த ஒரு வீரரை, இந்திய தேர்வாளராக நான் இருந்திருந்தால், இன்றே ஒப்பந்தம் செய்திருப்பேன் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
சுரேஷ் ரெய்னா:
ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் மூலம், திறமையான இளம் வீரர்களை இனம் கண்டு சர்வதேச இந்திய அணியில் இடம் கொடுத்து வருகின்றனர். இந்த வகையில், இந்திய அணியில் இடம் பிடித்தவர்கள் தான், நடராஜன், உம்ரான் மாலிக் உள்ளிட்ட பலர். தற்போது இவர்களது, வரிசையில் இடம் பிடிக்க போகும் வீரர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் மனம் திறந்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று அசத்தி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தான். இவர், நடப்பு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடி, 4 அரைசதம் மற்றும் ஒரு சதம் உட்பட 575 ரன்களுடன் 52.27 சராசரி எடுத்து அசத்தி உள்ளார். சமீபத்தில் கூட, கொல்கத்தா அணிக்கு எதிராக 13 பந்தில் அரைசதம் அடித்து, ஐபிஎல்லில் புதிய ரெகார்ட்டை படைத்துள்ளார்.
பிளே ஆப்புகாக போட்டி போடும் 10 அணிகள்…, யாருக்கு கிடைக்கும் அந்த வாய்ப்பு வெளியான வைரல் ப்ரோமோ!!
இந்நிலையில் தான், இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, “நான் இந்திய தேர்வாளராக இருந்திருந்தால், ஜெய்ஸ்வாலை உலகக் கோப்பைக்கு இன்றே ஒப்பந்தம் செய்திருப்பேன்” என்று கூறியுள்ளார். மேலும், தொடக்க வீரராக களமிறங்கி அசத்தும் இவர், சேவாக்கை நினைவுபடுத்துவதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு ரோஹித் சர்மா சிறந்த பேட்டரை தேர்வு செய்ய விரும்பினால், யஷஸ்வி ஜெய்ஸ்வால் முன்னிலையில் இருப்பார் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.