தோனி ஓய்வு குறித்து சின்ன தல வெளியிட்ட முக்கிய அப்டேட்…, இன்னும் ஒரு வருடம் விளையாடுவாரா??

0
தோனி ஓய்வு குறித்து சின்ன தல வெளியிட்ட முக்கிய அப்டேட்..., இன்னும் ஒரு வருடம் விளையாடுவாரா??

நடப்பு ஐபிஎல் சீசனுடன் தோனி தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என தகவல் வெளிவந்த நிலையில், CSKயின் சின்ன தல முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

தோனி:

ஐபிஎல் லீக் தொடரில், 5 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது விளையாடி வருகிறது. இந்த தொடரானது, தோனியை மையமாக கொண்டே நகர்கிறது. அதாவது, ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், இது கேரியரின் கடைசி தருணத்தை மகிழ்ச்சியுடன் விளையாட விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையடுத்து, இந்த சீசன் தான் இவரது, கடைசி சீசனாக இருக்கும் என எண்ணி, CSK போட்டிக்கு தோனியின் ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், வர்ணையாளர் ஒருவர், தோனியிடம் கடைசி சீசனை ரசித்து விளையாடுகிறார்களா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு தோனி, கடைசி சீசன் என்று நீங்கள் தான் சொல்கிறார்கள் என கூறினார். இவரது, பதில் ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.

அடேங்கப்பா.., நடிகை தேவயானி மகள் +2வில் இவ்வளவு மதிப்பெண்ணா?., குவியும் வாழ்த்து மழை!!

இந்நிலையில், CSKயின் சின்ன தல என கருதப்படும் சுரேஷ் ரெய்னா தோனி ஓய்வு குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, CSK அணி இம்முறை சாம்பியன் பட்டம் வென்றால், தோனி மேலும் ஒரு வருடம் விளையாட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். அவரது உடல் நிலையை பொறுத்து தான் இறுதி முடிவையும் எடுப்பார் என ரெய்னா தெரிவித்துள்ளார். மேலும், ஒட்டுமொத்த இந்தியாவும் அவர் தொடர்ந்து விளையாடுவதை தான் பார்க்க விரும்புகிறது என தெரிந்த இவர், தோனி இன்னும் ஒரு சீசனில் விளையாடுவார் என ரெய்னா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here