மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா: இரு விருதுகளை வென்று சாதனை படைத்த சூரரை போற்று!!

0

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சூரரை போற்று திரைப்படம் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றுள்ளது.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் சூரரை போற்று. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை இலட்சியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் OTT தளமான அமேசான் ப்ரைம்மில் வெளியானது.

சூர்யாவிற்கு அந்த படம் ஒரு மிகப்பெரிய திருப்பு முனையாகவே அமைந்தது. தமிழில் வெற்றி பெற்ற இந்த படம், பிற மொழிகளான கன்னடம்,மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு  மக்களிடையே நல்ல ஒரு வரவேற்பினை பெற்றது.


தற்போது சூரரை போற்று திரைப்படம் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதையும், சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் பெற்று சாதனை படைத்து உள்ளது. ஏற்கனவே இப்படம் 93 வது அகாடமி விருதுகளிலும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here