சூர்யாவின் இடத்தை பிடித்த பிரபல ஹிந்தி நடிகர்.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்டால் புலம்பும் ரசிகர்கள்!!

0
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் யதார்த்த நடிப்பில் வெளிவந்த படம் சூரரைப் போற்று. கடந்த சில வருடங்களாக சொல்லி கொள்ளும் அளவுக்கு வெற்றியை தராத சூர்யாவுக்கு இந்த படம் நல்ல திருப்புமுனையாக அமைந்தது.
சாமானிய மக்கள் ஏர் ஓட்டும் விவசாயியாக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி அவர்களை விமானத்தில் பறக்க வைக்க வேண்டும் என்பதை தன்னுடைய ஒரே லட்சியமாகக் கொண்ட விமான சேவை நிறுவன அதிபரின் கதையே சூரரைப் போற்று திரைப்படம். இதில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இது உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம்.
தமிழ் மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்தமாக தென் இந்திய ரசிகர்களை கவர்ந்த படம் இது. தற்போது இந்த படம் ஹிந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.  சூர்யாவுக்கு பதிலாக ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே தமிழில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட காஞ்சனா ஹிந்தியில் சரியாக ஓட வில்லை. இதில் நடித்ததும் அக்ஷய் குமார் தான். இதனால் இந்த செய்தி கேட்டு சூர்யா ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here