மணமணக்கும் ருசியான சுறா புட்டு ரெசிபி – மிச்சமே இருக்காது.., கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!!

0

கடல் உணவுகள் அனைத்துமே உடலுக்கு அதிக நன்மை தரக்கூடியவை ஆகும். அதிலும் மீன் உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாப்பிடலாம். இப்பொழுது ஹெல்தியான சுறா மீன் புட்டு எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்

சுறா மீன் – 1/2 கி

சின்ன வெங்காயம் – 100 கி

பூண்டு – 5 பல்

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

மிளகுத்தூள் – 2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி

சோம்பு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லி, கருவேப்பில்லை -0 சிறிது

செய்முறை

முதலில் சுறா மீனை நன்கு சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். அதனை இட்லி வேக வைப்பது போல இந்த மீனை இட்லி கொப்பரையில் போட்டு வேகவைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து இறக்கி அது ஆறியதும் தோல் மற்றும் முல்லை நீக்கி சதையை உதிரியாக்கி கொள்ளவும்.

அதன் பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம் போட்டு தாளித்து அதோடு வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கி கொள்ளவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுடன் பூண்டு சேர்த்து வதக்கவும். இப்பொழுது மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

அதன் பிறகு காரம் வேண்டும் என்பவர்கள் பச்சை மிளகாயை சேர்த்து கொள்ளவும். இவை அனைத்தும் நன்கு வதங்கியதும் மீனை சேர்த்து நன்கு கிளறி விடவும். அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். இப்பொழுது மிளகுத்தூள் சேர்த்து வதக்கி கொத்தமல்லி, கருவேப்பில்லை சேர்த்து நன்கு கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும். இப்பொழுது சுறா புட்டு தயார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here