மணிப்பூர் விவகாரம்.., வெளியான திடுக்கிடும் தகவல்.., உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!

0
மணிப்பூர் விவகாரம்.., வெளியான திடுக்கிடும் தகவல்.., உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!
மணிப்பூர் விவகாரம்.., வெளியான திடுக்கிடும் தகவல்.., உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!

மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் பழங்குடியின மக்களிடையே தொடர்ந்து வன்முறைகள் வெடித்த வண்ணம் இருக்கிறது. இந்த கலவரத்தால் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பல பெண்கள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த வன்முறையை எதிர்த்து பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த 1 ஆம் தேதி தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் 7 ஆம் தேதி மாநில டிஜிபி நேரில் ஆஜராகி வழக்கு பற்றி முழு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் மணிப்பூர் மாநில டிஜிபி ராஜீவ் சிங் ஆஜராகி பல்வேறு வழக்கு பற்றி பல விஷயங்களை தெரிவித்தார்.

மக்களே உஷார்.., தமிழகத்தில் அடுத்த 7 நாளைக்கு கொட்டி தீர்க்க போகும் கனமழை.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!!

ஆனால் இதன் பிறகு நீதிபதி கூறியதாவது, மணிப்பூர் விவகாரத்தில் மக்களுக்கு அனைத்து உண்மைகளும் தெரிய வேண்டும். இதனால் இனி இந்த வழக்கு விசாரணை, நிவாரணம், மறுசீரமைப்பு, இழப்பீடு, மறுவாழ்வு உள்ளிட்டவற்றை கண்காணிக்க முன்னாள் நீதிபதிகளான கீதா மிட்டல், ஷாலினி ஜோஷி, ஆஷா மேனன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்படும். இதனை சிபிஐ, ஐ.பி.எஸ், அதிகாரிகளும் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here