நாட்டில் நாய்க்கடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக நாயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் 150-180 ஊசிகள் செலுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் நாய்க்கடி மனுக்கள் பெருகி கொண்டே போன நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது, நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது மாநில அரசின் முதன்மை பொறுப்பாகும்.
எனவே குறைந்தபட்சம் நாயின் ஒரு பல் குறிக்கு ரூ 10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் தோல் சதை எடுக்கும் அளவுக்கு சென்றிருந்தால், 0.2 செ.மீ காயத்திற்கு ரூ 20 ஆயிரம் வழங்க வேண்டும். இதை பாதிக்கப்பட்டவர்களின் மாவட்டங்களின் துணை ஆணையர்கள் தலைமையில் குழுக்களை அமைக்குமாறு பஞ்சாப், ஹரியானா மாநில அரசுகளுக்கும், சண்டிகர் யூனியன் பிரதேச அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.