
நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் கோவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பெர்னாண்டஸ் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதனை விசாரித்த பல்கலைக்கழகம் ஒழுங்குமுறை கமிட்டி, பேராசிரியரை பணி நீக்கம் செய்ததோடு வேறு எங்கும் பணியாற்ற முடியாத படி தகுதி நீக்கம் செய்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு புகார் மனுவை பேராசிரியர் தாக்கல் செய்தார். மனுவை பரிசீலித்த நீதிபதிகள், “அனைத்து நிறுவனங்களிலும் முறையாக அமைக்கப்படாத விசாரணை கமிட்டியால் குற்றமற்றவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
அரசு துறைகள் மட்டுமல்லாமல் தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பாலியல் வன்கொடுமை புகார்களை விசாரிக்கும் கமிட்டி முறையாக அமைக்கப்பட்டுள்ளதா? என்பதை மத்திய மாநில அரசுகள் காலக்கெடு நிர்ணயித்து உறுதி செய்ய வேண்டும்.” என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.