தியேட்டர் விதிமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது.., உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

0
தியேட்டர் விதிமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது.., உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
தியேட்டர் விதிமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது.., உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

பொதுவாக உலகில் உள்ள அனைத்து திரையரங்கில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் மக்கள் வெளியில் இருந்து உணவு பொருட்களை வாங்கிட்டு போகும் சூழல் ஏற்படுகிறது. இருப்பினும் திரையரங்கில் வெளியில் இருந்து தின்பண்டங்கள் வாங்கிட்டு வருவதற்கு அனுமதி இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வழக்கறிஞர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் வெளியில் இருந்து உணவுப் பொருட்கள், குடிநீர் மற்றும் இதர குளிர்பானங்கள் கொண்டு செல்ல தியேட்டர்கள் அனுமதி தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கானது இன்றைய தினம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி நரசிம்மா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் அதிரடியான தீர்ப்பு ஒன்றை நீதிபதி வழங்கினார். அதாவது சினிமா தியேட்டரை பொறுத்தவரைக்கும் திரையரங்கு என்பது தனி நபருக்கு சொந்தமான இடம். அந்த இடத்திற்கு ஏற்ப உரிமையாளர்கள் என்ன விதிமுறைகளை வகுக்க வேண்டும் என சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அவர்கள்தான் முடிவெடுப்பார்கள்.

தமிழகத்திற்குள் நுழைந்த போதை பொருள் கடத்தல் கும்பல்.., முதலமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

அதில் நீதிமன்றம் எந்த உத்தரவு எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. மேலும் திரையரங்கில் தண்ணீர் கட்டாயம் இலவசமாக கொடுக்க வேண்டும் என்றும், கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here