உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு மதிப்பதில்லை – தலைமை நீதிபதி கோபம்!!

0

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பாயம் நியமனம் சார்ந்த தீர்ப்பை மத்திய அரசு மதிக்காமல் செயல்படுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா கோபமாக தெரிவித்துள்ளார்.

நீதிபதி கோபம்:

நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களில் நியமிக்கப்படும் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 5 ஆண்டுகள் பணியில்  நீடிக்க வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.  ஆனால், இதனை கருத்தில் கொள்ளாத வகையில், இந்த உறுப்பினர்களின் பதவி காலத்தை 5 ஆண்டிலிருந்து 4 ஆண்டாக குறைத்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியது.

 

மேலும், தீர்ப்பாயம் சார்ந்த உறுப்பினர் நியமனத்தில் பணிக்காலம் எதையும் நிர்ணயிக்கக்கூடாது என சென்னை பார் அசோசியேஷன் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் 16ம் தேதி காலிப்பணியிடங்கள் உள்ள தீர்ப்பாய உறுப்பினர்களை கால தாமதமின்றி உடனே நிரப்புமாறு உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இதனை அடுத்து 10 நாட்கள் கெடு வழங்கியும் அதனை நிரப்பாமல் உள்ள மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தையும், தனது கோபத்தையும் நீதிபதி ரமணா பதிவு செய்தார். அதாவது, தீர்ப்பாயத்தில் உறுப்பினர்களை பணியமர்த்த முடியவில்லை எனில் அதை கலைத்து விடுங்கள் என காட்டமாக பதிலளித்தார். மேலும் நீதிபதி, மத்திய அரசு தங்கள் கொடுக்கும் தீர்ப்புகளை பொருட்படுத்துவதே இல்லை. இது எங்களின் கோபத்தை தூண்டுவதாக உள்ளது என கூறியுள்ளார்.

இந்த வழக்கில் மேலும் ஆஜராகிய, கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா அரசு இதற்கான புதிய சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதால் விரைவில் அந்த பணியிடங்கள் தொடர்பாக முடிவெடுக்க உள்ளதாகவும், நீதிமன்றத்துடன் மோதல் போக்கில் ஈடுபடும் எண்ணம் இல்லை எனவும் தெரிவித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here