பல வருடங்கள் கழித்து ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த ரஜினி – அவரே வெளியிட்ட வைரல் பதிவு!

0
பல வருடங்கள் கழித்து ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த ரஜினி - அவரே வெளியிட்ட வைரல் பதிவு!

இந்தியாவில் வாழும் மக்கள் தங்களது வீட்டு முன் தேசிய கொடியை பறக்கவிட்டு, நம் தாய் நாட்டுக்கு பெருமை சேர்ப்போம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் வேண்டுகோள்:

இந்திய நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழாவை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த வருட விழாவை கொண்டாட மக்கள் வீட்டின் முன் கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கூறியதை சினிமா பிரபலங்களும் மற்றும் அரசியல் சார்ந்தவர்களும் பின்பற்றி வருகின்றனர். குறிப்பாக விஜய், ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் வீட்டின் முன்பு கொடி ஏற்றியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து ரஜினிகாந்த் தன் ரசிகர்களிடம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் நம் விடுதலைக்காக போராடி ரத்தம் சிந்திய ஒவ்வொரு வீரர்கள் மற்றும் தேச தலைவர்களை வணங்கும் விதமாக கொடி ஏற்ற வேண்டும். ஜாதி, மதம், கட்சி வேறுபாடு இல்லாமல், நாம் எல்லாரும் இந்தியர்கள் என்ற உணர்வோடும், ஒற்றுமையை வெளிக்காட்டும் விதமாக நாம் வீட்டின் முன்பு கொடி ஏற்ற வேண்டும் என்று மக்களிடம் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here