உயர உயர பறந்தாலும் காக்கா பருந்தாக முடியாது – சூப்பர் ஸ்டார் பட்டதால் பதறும் ரஜினிகாந்த்?

0
உயர உயர பறந்தாலும் காக்கா பருந்தாக முடியாது - சூப்பர் ஸ்டார் பட்டதால் பதறும் ரஜினிகாந்த்?
உயர உயர பறந்தாலும் காக்கா பருந்தாக முடியாது - சூப்பர் ஸ்டார் பட்டதால் பதறும் ரஜினிகாந்த்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது மேடையில் ரஜினி பேசியது தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அதாவது சமீபகாலமாகவே சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்று தொடர்ந்து விவாதங்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. ரஜினிக்கு பிறகு விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் இணையத்தில் சண்டை போட்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருக்கையில் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ஹுக்கும் பாடல் வரிகள். அதில் இடம்பெற்ற, ‘தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா; தலைமுறை கடந்து ஹிட்டானவன்; பேரை தூக்க நாலு பேரு பட்டத்தை பறிக்க நூறு பேரு’ என்ற வரிகள் நேரடியாக விஜய்யை தாக்கும் விதமாக இருந்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அட பாவமே.., யாரு கண்ணு பட்டுச்சோ.., விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி பிரபலம்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி உயர உயர பறந்தாலும் காக்கா பருந்தாக முடியாது என்று காக்கா, கழுகு கதையை சொல்லி அதில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசியுள்ளார். இதை வைத்து பார்க்கும் பொழுது சூப்பர் ஸ்டார் பட்டம் பறிப்போயிருமோ என்று ரஜினி பதற்றத்தில் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here