
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை ஹீரோவாக நடித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் ஜெயிலர், லால் சலாம் என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் வெறும் 5 ரூபாய் வாங்கி படத்தில் நடித்ததை குறித்து பிரபல இயக்குனரான பாரதிராஜா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதாவது ரஜினியை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் தான் பாரதிராஜா. இவர் இயக்கிய 16 வயதினிலே படத்தில் கமலை விட ரஜினி நடித்த பரட்டை கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து ரஜினியை வைத்து கொடி பறக்குது என்ற படத்தை ஒரு இயக்குனர் எடுக்க இருந்தார். ஆனால் ரஜினியோ பாரதி ராஜா எடுத்தால் மட்டும் தான் நான் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
அதற்கு பாரதி ராஜா, நீங்க 30 லட்சம் சம்பளம் கேப்பீங்க என்னால தர முடியாது என்று கூற, அவர் பாக்கெட்டில் இருந்து 5 ரூபாய் எடுத்து கொண்டு எனக்கு இந்த அட்வான்ஸ் போது,மீதம் பணத்தை படம் முடித்தபிறகு வாங்கிக்கிறேன் என்று ரஜினி கூறியுள்ளார். அந்த படமோ சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து நல்ல வரவேற்பை பெற்றது. சொன்னபடி 30 லட்சத்தை பாரதிராஜா கொண்டு போய் கொடுத்துள்ளார். அதில் 20 லட்சத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, 10 லட்சத்தை திருப்பி கொடுத்துள்ளார். அப்போது இருந்து இப்போது வரை சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த்.