“ஒரு கல்லில் ரெண்டு மாங்கா” தெளிவாக காய் நகர்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – காத்திருக்கும் அதிர்ச்சி!!

0
"ஒரு கல்லில் ரெண்டு மாங்கா" தெளிவாக காய் நகர்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - காத்திருக்கும் அதிர்ச்சி!!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 வது படத்தை குறித்து சூப்பர் ஆன தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரசிகர்கள் இந்த தகவலை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்:

தமிழ் சினிமா வரலாற்றில் வித்தியாசமான படங்களில் நடித்து வசூல் மன்னனாக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடித்த சந்திரமுகி, சிவாஜி, பாட்ஷா, படையப்பா, முத்து போன்ற பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தது. இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருது முதல் மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது வரை வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் பிரம்மாண்டமான மேடையில் இவரின் அடுத்த படத்திற்கான அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. அதாவது, மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நாளை (05-09-2022) நடைபெற இருக்கிறது. இந்த விழாவிற்கு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் பங்கேற்க இருக்கின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி ரஜினியின் 170-வது திரைப்படத்தை இயக்க இருப்பதாக சில தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மேடையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here