சிவகார்த்திகேயன் வரிசையில் நடிப்பில் களமிறங்கிய விஜய் டிவி பிரபலம் – குவியும் வாழ்த்துக்கள்!

0
விஜய் டிவியில் இந்த பிரபல சீரியலில் விலகும் நடிகர்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!
விஜய் டிவியில் இந்த பிரபல சீரியலில் விலகும் நடிகர்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமானவர் பிரியங்கா. தற்போது இவர் வெள்ளித்திரையில் களமிறங்கி உள்ளார்.

சூப்பர் சிங்கர் பிரியங்கா:

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வரிசையில் செல்ல குரலுக்கான தேடல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியால் பல பேர் வாழ்க்கையே மாறியுள்ளது. அந்த வரிசையில் சூப்பர் சிங்கர் பிரியங்காவும் ஒருவர். இதனை தொடர்ந்து சில படங்களில் பாடியுள்ளார். தற்போது மருத்துவராகவும் வலம் வருகிறார் பிரியங்கா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் சூப்பர் சிங்கர் பிரியங்கா நடிப்பில் களமிறங்கி உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் கூடிய விரைவில் வெளியாக இருக்கும் பிசாசு 2 படத்தின் புரோமோஷனுக்காக ஒரு பாடல் படமாக்கப்பட்டுள்ளது. அந்த பாடலை சூப்பர் சிங்கர் பிரியங்கா பாடியும் அதில் நடித்தும் அசதி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வால் சூப்பர் சிங்கர் பிரியங்காவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here