“கே எல் ராகுலுக்கு இதுதான் கடைசி வாய்ப்பு” இந்திய அணியின் முன்னாள் வீரர் ஓபன் டாக்!!

0
"கே எல் ராகுலுக்கு இதுதான் கடைசி வாய்ப்பு" இந்திய அணியின் முன்னாள் வீரர் ஓபன் டாக்!!

சமீபகாலமாக கிரிக்கெட் போட்டிகளில் பார்மின்றி தடுமாறி வரும் கே எல் ராகுலுக்கு இது தான் கடைசி வாய்ப்பாக இருக்கும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கே எல் ராகுல்:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு எதிராக, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில், நாளை முதல் ஒரு நாள் தொடர் மும்பையில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கே எல் ராகுலின் இடம் தான் பெரும் கேள்வி குறியாகி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் சொதப்பிய கே எல் ராகுலுக்கு அடுத்த 2 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இவருக்கு பதிலாக களமிறங்கிய சுப்மன் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெஸ்டில் தனது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார். இந்த டெஸ்டில், கே எஸ் பரத் விக்கெட் கீப்பராக செயல்பட்டதால் இந்த இடமும் டெஸ்டில் கே எல் ராகுலுக்கு பறிபோனது. இதனாலேயே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கே எல் ராகுலுக்கு கிடைக்கும் கடைசி வாய்ப்பாக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி படைக்க உள்ள சாதனைகள்…, ஒரே தொடரில் அசத்தி படைப்பாரா??

இந்நிலையில் சுனில் கவாஸ்கர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு கே எல் ராகுலை விக்கெட் கீப்பராகவும் 5 அல்லது 6 வது இடத்தில் களமிறங்கும் பேட்ஸ்மேனகாகவும் பயன்படுத்தி கொள்ளலாம் என கூறியுள்ளார். மேலும், இந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் இடத்தை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கே எல் ராகுல் செய்யப்படும் விதத்தை கருத்தில் கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு வாய்ப்பு அளிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here