இந்திய அணியின் பயிற்சியாளராக தோனி…, ஹிண்ட் கொடுத்த சுனில் கவாஸ்கர்!!

0
இந்திய அணியின் பயிற்சியாளராக தோனி..., ஹிண்ட் கொடுத்த சுனில் கவாஸ்கர்!!
இந்திய அணியின் பயிற்சியாளராக தோனி..., ஹிண்ட் கொடுத்த சுனில் கவாஸ்கர்!!

இந்திய அணியின் பயிற்சியாளராக தோனி வர அதிக வாய்ப்பு உள்ளதாக சுனில் கவாஸ்கர் கூறியதுடன், அதற்கான வழிமுறையும் எடுத்துரைத்துள்ளார்.

தோனி:

சர்வதேச இந்திய அணியின் கேப்டனாக இருந்து, டி20, ஒருநாள் மற்றும் ஐசிசி சாம்பியன் டிராபி என பெரிய அளவிலான தொடர்களை வென்று கொடுத்த ஒரே கேப்டனாக தோனி திகழ்கிறார். இவர் சர்வதேச அணியில் இருந்து, 2019 ஆம் ஆண்டே விலகிய நிலையில், ஐபிஎல் தொடரில் மட்டும் CSK அணிக்காக தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது நடந்து வரும், ஐபிஎல் தொடரின் 16 வது சீசனில் இருந்து, இவர் ஓய்வு பெறுவார் எனவும் பல்வேறு தகவல்களும் வெளியாகி இருந்தனர். ஆனால், இது குறித்து, லக்னோ அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பான வர்ணையாளர் சந்திப்பில் தோனி, “நீங்கள் தான் நான் ஓய்வு பெற போகிறேன் என்று கூறுகிறார்கள். நான் அல்ல” என தெரிவித்து இருந்தார். இதனால், ரசிகர்கள் பலர் குழப்பத்துடனும், ஆச்சரியத்துடனும் இருந்து வருகின்றனர்.

LSGக்கு எதிரான போட்டியால் முதலிடத்தை இழந்த CSK…, ஐபிஎல் புள்ளி பட்டியலில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்!!

இந்நிலையில், முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், தோனி இந்திய அணியின் பயிற்சியாளராக திகழ அதிக வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். ஆனால், அதற்கு 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார். அதாவது, தேர்வுக் குழு, மேலாளராக அல்லது பயிற்சியாளர் என எதுவாக இருந்தாலும், அனைத்து வகையான கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி கூலிங்-ஆஃப் பீரியட் ஒரு வீரருக்கு தேவை என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here