“ஹர்திக் பாண்டியா இந்தியாவின் 3 வடிவ கேப்டனாக மாறும் நேரம் இதுதான்”…, சுனில் கவாஸ்கர் ஓபன் டாக்!!

0
"ஹர்திக் பாண்டியா இந்தியாவின் 3 வடிவ கேப்டனாக மாறும் நேரம் இதுதான்"..., சுனில் கவாஸ்கர் ஓபன் டாக்!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஹர்திக் பாண்டியா தலைமை தாங்க உள்ள நிலையில், சுனில் கவாஸ்கர் இவரை குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா:

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி வரும் 17ம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் மட்டும், ரோஹித் சர்மா குடும்ப கடமை காரணமாக விலகி உள்ளார். இதனால், ஹர்திக் பாண்டியா முதல் முறையாக, ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை வழிநடத்த உள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் விளைவால், இவர் மீது தற்போது அதிக எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், ஹர்திக் பாண்டியா குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ஹர்திக் பாண்டியா கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், குஜராத் டைட்டன்ஸ் அணியை வழி நடத்தி சாம்பியன் பட்டத்தையும் வெல்ல முக்கிய பங்கு வகித்தார்.

IPL 2023: ஜியோ சினிமாவின் பிராண்ட் தூதராக இந்தியாவின் 360 டிகிரி நாயகன்!!

மேலும், அணியின் இக்கட்டான நேரத்தில், ஆல் ரவுண்டராக தனது பங்கையும் செய்து அசத்தி இருந்தார். இவரது தலைமையின் கீழ், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றால், அக்டோபர் மாதம் நடைபெற உள்ள 50 ஓவர் உலக கோப்பை தொடர் முடிந்த பிறகு, இவரே இந்திய அணியின் மூன்று வடிவ கேப்டனாக செயல்படுவார் என சுனில் கவாஸ்கர் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here