Wednesday, August 4, 2021

சன் டிவியில் புதிய அத்தியாயத்துடன் தொடங்கிய பிரபல சீரியல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

Must Read

சன் டிவியில் லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்ட பிரபல சீரியல் தற்போது திங்கள் கிழமையில் இருந்து மீண்டும் தொடங்கவுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

சன் டிவி சீரியல்

சன் டிவியில் சீரியல்கள் யாவும் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே சீரியல் என்றாலே அது சன் டிவியாக தான் இருந்தது. ஆனால் தலைமுறை மாற்றத்தால் தற்போது எந்த சேனலை ஆன் செய்தலும் அதில் சீரியல் தான்.

மேலும் இளம் ஜோடிகளுக்கு சீரியல்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளித்திரையே தோற்று போகும் அளவிற்கு சின்னத்திரையில் கதைக்களம் இருந்து வருகிறது.

மேலும் சன் டிவியிலும் இதே கான்செப்ட்டில் தான் பல சீரியல்களை இயக்கி வருகின்றனர். அந்த வகையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் ‘சுந்தரி’. ஆரம்பத்திலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. அதாவது படிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்த நிலையில் அம்மாவின் வற்புறுத்தலின் திருமணம் செய்துகொண்டார்.

கணவருக்கும் தன்னை பிடிக்காமல் போகவே வீட்டை விட்டே வெளியேறினார். சுந்தரியை அனைவரும் தேடி கொண்டிருக்க திடீரென போடப்பட்ட லாக்டவுன் காரணமாக சுந்தரி சீரியல் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாக உள்ளதாக சீரியல் குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

அதிரடியான கெட்டப்பில் ரசிகர்களை மிரளவைத்த வனிதா – வைரலாகும் ஷூட்டிங் புகைப்படம்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான வனிதா தற்போது தனது புதிய படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்க இருக்கும் நிலையில் அந்த புகைப்படத்தை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -