கண்விழிக்கும் அனுவின் அம்மா – சுந்தரி வீட்டிற்கு வரும் முருகன்! மாட்டிக்கொள்வாரா கார்த்திக்??

0

சுந்தரி சீரியலில் அனுவின் அம்மாவிற்கு எதோ ஒரு உண்மை தெரிந்து மயக்கமடைந்து விழ பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது கண் முழித்துள்ளார். மேலும் சுந்தரி வீட்டிற்கு எதிர்ப்பாராத விதமாக வருகிறார் முருகன்.

சுந்தரி

சுந்தரி சீரியலில் தற்போது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது அனுவின் அம்மா மல்லிகா திடீரென மயங்கி விழுகிறார். அதாவது கார்த்திக் பற்றிய விஷயம் தெரிந்ததும் தன் மகளின் வாழ்க்கை இப்படி பறிபோய் விட்டதே என்று படபடப்பில் மயங்கியே விழுந்து விட்டார்.

எப்படியும் கண்விழித்தால் கார்த்திக் பற்றிய உண்மையை சொல்லி விடுவார் என்று அனைவரும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் மல்லிகா கண் விழிப்பதே கடவுள் கையில் தான் உள்ளது என்று கூறி விட்டனர். அப்படி இருக்க தற்போது ப்ரோமோவில் மல்லிகா கண்விழித்து விட்டார்.

ஆனால் டாக்டர் அவரை குழந்தை போல பார்த்து கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர். அதற்கு கார்த்திக் குழந்தை போல கிடையாது குழந்தையே தான் என்று சொல்கிறார். அதற்கு மல்லிகாவும் திரும்பி பார்க்கிறார். இதில் தான் ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.

மெஸ்ஸி துடைச்சு போட்ட திசு பேப்பர் இவ்வளவுக்கா விற்பனையானது???

மல்லிகாவிற்கு நினைவு திரும்பி விட்டதா?? அல்லது கார்த்திக் எதுவும் மிரட்டி வைத்துள்ளாரா?? என்று ரசிகர்கள் குழம்பியுள்ளனர். இந்நிலையில் தான் சுந்தரி வீட்டிற்கு செல்ல அங்கு முருகனும் அவரது மனைவியும் கிருஷ்ணனும் அமர்ந்திருப்பதை பார்த்து ஷாக்காகிறார்.

கார்த்திக் எங்கே என்று கேட்க அதற்கு என்ன சொல்வது என்றே தெரியாமல் முழித்து கொண்டுள்ளார். மேலும் வள்ளிக்கு என்று எதோ சொல்ல வர அதனை பார்த்து பதறுகிறார் சுந்தரி. இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here