அனுவுக்கு துரோகம் செய்து சுந்தரியிடம் வந்த கார்த்திக்… ரொமான்ஸ்ல விஜய் டிவியையே மிஞ்சிய சுந்தரி சீரியல்!!!

0

சன் டிவியில் டாப் சீரியல் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு சீரியல் சுந்தரி. இந்த சீரியலில் கார்த்திக் மற்றும் சுந்தரிக்கும் இடையே ரொமான்ஸ் நிகழ்வது போன்றதொரு ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. இது அந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சுந்தரி. இதில் நிற மற்றும் உருவ கேலிக்கு ஆளாகும் கதையின் நாயகி சுந்தரி, விதி வசத்தால் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். தான் ஒரு IAS ஆக வேண்டும் என்பதே சுந்தரியின் மிக பெரிய ஆசை. மேலும் கார்த்திக்கும் சரி, சுந்தரிக்கும் சரி திருமணத்தில் விருப்பம் இல்லை.

இருப்பினும் சுந்தரி நாளடைவில் கார்த்திக்கை ஏற்று கொள்கிறார்.ஆனால்  கார்த்திக் அனு என்ற தான் காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு  சுந்தரிக்கு துரோகம் செய்கிறார். நாட்கள் கடக்க கடக்க இந்த விஷயம் அறியும் அனுவின் அம்மா மயக்கம் அடைந்து கோமா நிலைக்கு செல்கிறார். இதனால் நிம்மதியில் அனு மற்றும் சுந்தரி உடன் வாழ்ந்து வருகிறார் கார்த்திக்.

தற்போது இந்த சீரியலின் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கார்த்திக் , சுந்தரிக்கு உணவு ஊட்டுதல், அவரை அன்பாக பார்த்து கொள்ளுதல், அவருக்கு பரிசு பொருட்கள் வாங்கி தருதல், மேலும் சுந்தரி உடன் ரொமான்ஸ் செய்வது போல உள்ளார். இந்த ப்ரோமோ ஒரு வேளை கனவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் கிளப்பி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here